வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (07:30 IST)

நியூசிலாந்தை வீழ்த்திய ஓவர்த்ரோ: குப்தில் செய்த இரண்டு தவறுகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி நூலிழையில் கோப்பையை நழுவவிட்டது. அந்த அணி செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகளே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது
 
நேற்றைய போட்டியின் 49வது ஓவரின் 4வது பந்தில் நீஷம் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் அடித்தார். பந்து பவுண்டரி லைன் அருகே சென்றபோது அதை மிக அருமையாக குப்தில் கேட்ச் பிடித்தார். ஆனால் அவர் பவுண்டரி கோட்டை கவனிக்காததால் அவரது கால் பவுண்டரி லைனை தொட்டுவிட்டது. கொஞ்சம் சுதாரித்து கேட்ச் பிடித்தவுடன் பந்தை அவர் தூக்கி வீசியிருந்தால் அருகில் இருந்த இன்னொரு ஃபீல்டர் அந்த பந்தை பிடித்திருப்பார். ஸ்டோக்ஸ் அவுட் ஆகியிருப்பார். போட்டியும் நியூசிலாந்து பக்கம் திரும்பியிருக்கும். குப்தில் செய்த அந்த மிகப்பெரிய தவறு கோப்பை நழுவ ஒரு காரணமாக இருந்தது
 
அதேபோல் 49வது ஓவரின் 4வது பந்தை டிரெண்ட் போல்ட் வீச, அதனை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். இரண்டாவது ரன்னுக்கு ஸ்டோக்ஸ் ஓடி வந்தபோது அவரை ரன் அவுட் ஆக்கும் முயற்சியில் குப்தில் பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசினார். ஆனால் பாய்ந்து வந்து பேட்டை கிரீஸில் வைக்க முயன்ற ஸ்டோக்ஸின் பேட்டில் அந்த பந்துபட்டு பவுண்டரி லைனுக்கு சென்றது. இதனால் ஓடிய இரண்டு ரன்களும், ஓவர் த்ரோவிற்காக 4 ரன்களும் என அந்த பந்தில் ஆறு ரன்கள் இங்கிலாந்துக்கு கிடைத்தது. 
 
குப்தில் செய்த இந்த இரண்டு தவறுகளே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கும், நியூசிலாந்து அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது