1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gavaskar harsh comment on Jaiswal and rohith sharma

ரோஹித் இதயத்தில் இருந்து ரஞ்சி போட்டியில் விளையாடினாரா?... சுனில் கவாஸ்கர் காட்டம்!

ஜெய்ஸ்வால்
சமீபகாலமாக இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில்  ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான்.  இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள ரஞ்சி போட்டியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் முடிவை எடுத்தார்.  ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் விளையாடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதே போல ஜெய்ஸ்வாலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளர். அதில் “அவர்கள் இருவரும் தங்கள் இதயத்தில் இருந்து ரஞ்சிப் போட்டியில் விளையாடினார்களா, அல்லது ரஞ்சி போட்டியில் விளையாடாவிட்டால் இஷான் கிஷான் போல பிசிசிஐ ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும் என விளையாடினார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!