வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (23:52 IST)

முதல்முறையாக இறுதி போட்டியில் சூப்பர் ஓவர்: சாம்பியன் ஆனது இங்கிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கடைசி வரை யாருக்கு வெற்றி என்ற த்ரில் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது
 
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 242 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி  50ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்தது. 
ஸ்கோர் விபரம்:
 
நியூசிலாந்து அணி: 241/8   50 ஓவர்கள்
 
நிக்கோலஸ்: 55
லாதம்: 47
வில்லியம்சன்: 30
குப்தில்: 19
 
இங்கிலாந்து அணி: 241/10 50 ஓவர்கள்
 
ஸ்டோக்ஸ்: 84
பட்லர்: 59
பெயர்ஸ்டோ: 36
ஜேஜே ராய்: 17
 
சூப்பர் ஓவர்: 
 
இங்கிலாந்து: 15/0
 
நியூசிலாந்து: 15/1
 
சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகள் 15 ரன்கள் என்ற ஒரே ரன்களை அடித்தன. ஆனால் லீக் போட்டிகளில் இங்கிலாந்து அணி அதிக பவுண்டரிகள் அடித்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
 
2019ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் ஆனது