ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2025 (09:19 IST)

பாலிவுட் நடிகையை ‘டேட்’ செய்கிறாரா சிராஜ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடியதன் மூலம் கவனம் பெற்று இந்திய அணிக்குள் நுழைந்தார் முகமது சிராஜ். கோலிக்குப் பிடித்த வீரராக இருந்ததால் அவருக்கு அதிகளவு வாய்ப்புகள் கிடைத்தன.  சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.  இதனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐசிசி யின் ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடமும் பிடித்தார்.

இதனால்  டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெற்றார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. பார்டர் கவாஸ்கர் தொடரிலும் அவரின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால் தற்போது சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான அணியில் எடுக்கப்படவில்லை.

தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் சிராஜ் பற்றி ஒரு தகவல் இந்தி ஊடகங்களில் பரவி வருகிறது. அதன்படி பாலிவுட் நடிகையான மஹிரா சர்மாவும் சிராஜும் ‘டேட்’ செய்வதாக தகவல்கள் பரவ அதை மஹிராவின் தாயார் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக அவர் “என் மகளுக்கும் சிராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என விளக்கமளித்துள்ளார்.