புதன், 6 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (19:15 IST)

அனல் பறந்த பவுலிங்… தடுமாறிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் – இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு !

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் இன்று நடைபெறவுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் முதல்முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை தெரிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்தது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர்.  அந்த அணியின் குப்தில் (19), நிக்கோல்ஸ்(55), கேன் வில்லியம்ஸன் (30), ராஸ் டெய்லர்(15) என எடுத்து சீரான இடைவெளியில் அவுட் ஆக ரன்ரேட் 5 ஐ தாண்ட முடியாமல் இருந்தது. அதையடுத்து வந்த லாதம் 47 ரன்களும், நீஷம் மற்றும் காலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் முறையே 19 மற்றும் 16 ரன்களும் சேர்க்க நியுசிலாந்து கௌரவமான ஸ்கோரை எட்டியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியுசிலாந்து விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிளங்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 241 என்ற எளிய இலக்கை இங்கிலாந்து துரத்தி கோப்பையை வெல்லுமா என்று இங்கிலாந்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.