ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (06:25 IST)

20 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு 'டை' மேட்ச்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக நேற்று இறுதிப்போட்டி 'டை' ஆனதை அடுத்து 'சூப்பர் ஓவர்' போடப்பட்டது. சூப்பர் ஓவரும் 'டை' ஆனதால் இந்த தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது
 
இதற்கு முன்னர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 'டை' ஆனதில்லை என்றாலும் கடந்த 1999ஆம் ஆண்டு அரையிறுதி போட்டி 'டை' ஆகியுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் தென்னாப்பிரிக்காவின் குளூஸ்னர், ஆலன் டொனால்ட் களத்தில் இருந்தனர். ஒரு கட்டத்தில் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் குளுஸ்னர் பந்தை அடித்துவிட்டு ரன்னுக்கு ஓட, பந்தையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆலன் டொனால்ட் ஓடவில்லை. இதனால் அவர் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது
 
1999ஆம் ஆண்டுகளுக்கு பின் மிகச்சரியாக 20 வருடங்கள் கழித்து உலகக்கோப்பையில் மீண்டும் ஒரு போட்டி 'டை' ஆகியுள்ளது. ஆனால் சூப்பர் ஓவரும் 'டை' ஆனது இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.