1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ricky ponting answer Steve smith as best of this generation

ஸ்டீவ் ஸ்மித்தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரரா?... ரிக்கி பாண்டிங் அளித்த பதில்!

ஸ்டீவ் ஸ்மித்
தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டராக இருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட் போட்டிகளில் அவர் 55க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார்.பிராட்மேனுக்கு அடுத்து அதிக சராசரி கொண்ட கிரிக்கெட் வீரராக இருந்த ஸ்மித் சமீபகாலமாக சறுக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த தலைமுறையின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தான் என சொல்லப்படுவதற்கு பதிலளித்துள்ளார்.

அதில் “இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வீரர் ஸ்மித்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.  ரூட் மற்றும் வில்லியம்சன் ஆகியோரும் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.  சில வருடங்களுக்கு முன்னர் இவர்கள் செய்ய முடியாத சாதனைகளை கோலி செய்துவந்தார். ஆனால் ரூட் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 19 சதங்களை அடித்துள்ளார். அதனால் நான்கு பேருமே சிறந்த வீரர்கள்தான்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth