வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (23:10 IST)

குஜராத் டைட்டனுக்கு மீண்டும் ஒரு வெற்றி.. புள்ளிப்பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளியது..!

ஐபிஎல் தொடர் போட்டியில் இன்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் மும்பை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 143 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 20வது ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து புள்ளி பட்டியலில் முன்னேறி உள்ளது 
 
கேப்டன் சுப்மன் கில் 35 ரன்கள், சாய் சுதர்சன் 31 ரன்கள், எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி நேரத்தில் ராகுல் திவட்டியாக அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
 
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளதால் அந்த அணிக்கு அடுத்த சுற்றுகள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva