1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. After 14 years zero cup holding teams clash in IPL final

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்துக்கு நெருங்கியுள்ளோம். ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இதுவரை கோப்பை வெல்லாத அணிகள் என்பதால் கோப்பை வெல்லாத ஒரு அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிக் கோப்பை வெல்லாத அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இரு அணிகளுமே பல திறமையான வீரர்களைக் கொண்டு 17 சீசன்கள் விளையாடி வந்தாலும் அவர்களுக்குக் கோப்பைக் கனவு எட்டாக்கனியாகவே இருந்தது. ஆனால் இந்த முறை இரு அணிகளுமே புது வீரர்களை எடுத்துக் கேப்டன்களை மாற்றியமைத்து இறுதிப் போட்டி வரை வந்துள்ளன.
About Writer
vinoth