ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (15:25 IST)

டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு.. ரன்னை கட்டுப்படுத்துமா? – ப்ளேயிங் 11 அப்டேட்!

KKR vs RCB
இன்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.



இந்த சீசனில் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி வரும் நிலையில் ஆர்சிபி பவுலிங், பேட்டிங் இரண்டிலுமே சொதப்பி வருகிறது. 7 போட்டிகளுக்கு 1 போட்டி மட்டுமே வென்றுள்ள ஆர்சிபி அணி ப்ளே ஆப் செல்வதே கனவாக உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஆரம்பமே கொல்கத்தாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களை குறைத்தால் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட்(w), சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர்(c), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பாப் டூ ப்ளெசிஸ், விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மகிபால் லம்ரோர், கரன் சர்மா, லாகி பெர்குசன், யாஷ் தயால், முகமது சிராஜ்

Edit by Prasanth.K