1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shreyas iyer eashy way of enjoying success

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

கிரிக்கெட்
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.  போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த அபாரமான இன்னிங்ஸ்க்காக ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “எனக்கு பாதிவேலைதான் முடிந்துள்ளது. நான் இப்போதைக்கு இறுதிப் போட்டி பற்றி நினைக்க மாட்டேன். முதலில் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்வேன். ரிலாக்ஸாக மசாஜ் செய்துவிட்டு, இறுதிப் போட்டிக்குத் தயாராவேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
2 பேரும் செய்தது ஒரே தவறுதான்.. ஆனால் ஸ்ரேயாஸ்க்கு ரூ.24 லட்சம், ஹர்திக்கிற்கு ரூ.30 லட்சம் அபராதம்..!