1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (17:57 IST)

எவ்ளோ கண்ட்ரோல் பண்ண பாத்தும் முடியல.. 200+ தாண்டிய கொல்கத்தா! – அதிரடி காட்டுமா ஆர்சிபி?

இன்று ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், ஆர்சிபி அணியும் மோதி வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 222 ரன்களை குவித்துள்ளது.



டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்து 4.2வது ஓவரில் பில் சால்ட் (48 ரன்கள்), 52வது ஓவரில் சுனில் நரேன் (10 ரன்கள்), 5.6வது ஓவரில் ரகுவன்சி (3 ரன்) என பவர்ப்ளே முடிவதற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை ஆரம்பமே தன் வசமாக்க தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த கொல்கத்தா ப்ளேயர்கள் குறைந்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்களை அதிகப்படுத்தினர்.

ஸ்ரேயாஸ் ஐயரின் அரைசதம் அதை தொடர்ந்து ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் குவித்த 20+ ரன்கள் என 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. இதனால் தற்போது 223 என்ற இலக்கோடு களம் இறங்கியுள்ள ஆர்சிபி அணி தற்போதைய நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 2 ஓவருக்கு 27 ரன்கள் என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து விராட் கோலி விக்கெட் இழக்காமல் அடித்து விளையாடினால் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Edit by Prasanth.K