1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 2 ஜூன் 2025 (13:36 IST)

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல முக்கியக் காரணியாக அமைந்தார். ஆனால் அதன் பிறகு அவர் காயம் மற்றும் ஃபார்ம் அவுட் ஆகியவற்றால் ரன்கள் அடிக்க முடியாமல் அவதிப்படுகிறார்.

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் கூட பஞ்சாப் அணியில் விளையாடிய மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் காயம் காரணமாக பாதியிலேயே தாய்நாடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி 20 போட்டிகளில் மட்டும் அவர் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

36 வயதாகும் மேக்ஸ்வெல் இதுவரை 149 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3990 ரன்கள் சேர்த்துள்ளார். நான்கு சதங்களும் ஒரு இரட்டை சதமும் அடித்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஆடிய இன்னிங்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.