1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (16:39 IST)

சகா, கில் அரை சதங்கள்: வெளுத்து வாங்கும் குஜராத்..!

gujarat titan vs luke gaint
ஐபிஎல் தொடரின் 51 வது போட்டி இன்று குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் லக்னோ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான சகா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கிய நிலையில் சகா 43 பந்துகளில் 81 ரன்களும் கில்  32 பந்துகளில் 58 ரன்களும் எடுத்துள்ளனர். சற்றுமுன் வரை குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதே ரீதியில் சென்றல் குஜராத் அணியின் 20 ஓவர்களில் 250 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை குஜராத் 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் லக்னோ அணை 11 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva