திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (09:47 IST)

ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையைப் படைத்த ஒரே வீரர் கோலிதான்… அசாதாரண மைல்கல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான கோலி, மூன்று வடிவிலான போட்டிகளிலும் அசாதாரணமாக ரன்களைக் குவித்து வருபவர். அதனால் அவரை ரன் மெஷின் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான இளம் வீரராக அறிமுகம் ஆகி, தனது அசுரத்தனமான ஃபார்மால் இன்று உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் கோலி.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக விளையாடி வரும் அவர் முதல் ஆளாக 7000 ரன்களைக் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார்.