1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (18:56 IST)

தவறை உணர்ந்து ஹர்பஜனிடம் மன்னிப்பு கேட்ட கங்குலி!!

இந்திய கிரிகெட் வீரர் கங்குலி தனது சக கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிடம் தான் செய்த தவறை உணர்ந்து டிவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
கங்குலி டிவிட்டரில் தனக்கென கணக்கு வைத்திருந்தாலும், அதில் அவ்வளவு ஆக்டிவ்வாக இருப்பத்தில்லை. ஆனால், சமீபத்தில் ஹர்பஜன் சிங் செய்த பதுவு ஒன்றிற்கு பதில் அளித்து அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
 
ஹர்பஜன் சிங் தற்போது இந்திய அணிக்கான போட்டிகளில் விளையாடாத காரணத்தால், தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
 
அந்த வகையில், ஹர்பஜன்சிங் தனது மனைவி, குழந்தையுடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்.
 
இதை கண்ட கங்குலி, உங்கள் மகன் அழகாக இருக்கிறான். எனது அன்பை அவனுக்கு கொடுக்கவும் என ஹர்பஜன் ட்விட்டுக்கு பதிலளித்திருந்தார். 
 
அதன், பின்பு தனது தவறை உணர்ந்து, மன்னித்துக்கொள்ளவும். உங்கள் மகள் அழகாக இருக்கிறார். எனக்கு வயதாகிறதல்லவா அதான் தெரியவில்லை என டிவிட் செய்திருந்தார் கங்குலி. 
 
பதிலுக்கு ஹர்பஜன், தாதா உங்கள் ஆசிக்காக நன்றி. விரைவில் உங்களை சந்திக்க வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.