புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (22:53 IST)

மன்னிப்பு கேட்டனர் கடலோர காவல்படையினர்: மீனவர்கள் ரியாக்சன் என்ன?

இதுவரை இலங்கை கடற்பயினர்கள்தான் தமிழக மீனவர்க மீது துப்பாக்கி சூடு நடத்தி வந்த நிலையில் நேற்று இந்திய கடற்பயினர்களும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் கடலோர காவல்படையினர் இன்று தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாது என்று அவர்கள் உறுதியும் அளித்துள்ளனர்.

கடலோர காவல்படையினர் வருத்தம் கேட்டதை அடுத்து நாளை ராமேஸ்வரத்தில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மீன்பிடிக்க போவதை நிறுத்தி வைத்திருந்த மீனவர்கள் வரும் 18ஆம் தேதி முதல் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.