ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (15:42 IST)

இண்டிகோ பெண் ஊழியரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஆண்

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆண் ஒருவரை தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகளிடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு சர்ச்சையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதில், இரண்டு நபர்களை அதிகரிகள் இழுத்துச் செல்கிறார்கள். அதில் ஒருவரை அறைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அந்த நபர் இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். 
 
விமான நிலையத்திற்கு பணிக்கு வந்த பெண்ணை இரண்டு நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அங்குள்ள பாதுகாப்பு காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த இரண்டு நபர்களில் ஒருவர் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இண்டிகோ பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற நபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை ஊழியர்கள் பயணிகளிடம் தவறாக நடந்துக்கொண்டு வந்தனர். அதற்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்ப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை தலைகீழாக நடைபெற்றுள்ளது.