இலங்கைக்கு எதிரான போட்டியில் கங்குலியை வீழ்த்த காத்திருக்கும் கோலி!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 14 நவம்பர் 2017 (16:51 IST)
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் 16 ஆம் தேதி துவங்குகிறது.

 
 
இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
 
இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி கேப்டன் கோலி கங்குலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.
 
இந்திய கேப்டன்களில் அதிக வெற்றி பெற்றவர்களில் 2 வது இடத்தில் இருக்கிறார் கங்குலி. கங்குலி தலைமையில் இந்திய அணி 21 டெஸ்டில் வெற்றி பெற்று இருக்கிறது. 
 
கங்குலிக்கு பின்னர் விராட்கோலி 19 வெற்றியுடன் 3 வது இடத்தில் உள்ளார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும் போது கோலி கங்குலியின் சாதனையை முறியடிப்பார்.
 
தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய போது 27 வெற்றிகளை பெற்று அவர் முதல் இடத்தில் உள்ளார். கோலி தலைமையிலான் அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் கோலி கங்குலியின் சாதனையை வீழ்த்தி முன்வருவேர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :