தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி சாம்பியன் ஆஃப் த மந்த் இவர்தான்… இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி!
- நாங்கள் நியுசிலாந்தில் 3 நாட்களில் தோற்றபோது யாருமே பேசவில்லை… கோலி ஆதங்கம்!
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… நான்காவது போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு வாய்ப்பு – எப்படி தெரியுமா?
- அகமதாபாத் மைதானத்தை தொடர்ந்து கிண்டல் செய்யும் இங்கிலாந்து வீரர்!
- ஒருநாள் தொடரிலும் பூம்ரா இல்லையா? பிசிசிஐ வட்டாரம் தகவல்!
சர்ச்சைகளுக்கு நடுவே இன்று தொடங்குகிறது நான்காவது டெஸ்ட் போட்டி!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டி இரண்டே நாட்களில் முடிந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மைதானத்தின் மீதும் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மைதானம் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் நடக்க உள்ளது. ஆனால் 3 ஆவது டெஸ்ட்டை போல இல்லாமல் பகல் டெஸ்ட் போட்டியாக வெள்ளை நிறப்பந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கும் மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாகவே அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
