வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (08:46 IST)

ஒருநாள் தொடரிலும் பூம்ரா இல்லையா? பிசிசிஐ வட்டாரம் தகவல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் பூம்ரா இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதையடுத்து 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்து வரும் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து சொந்த காரணங்களுக்காக அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. ஐபிஎல் மற்றும் ஆஸி தொடரால் பூம்ராவுக்கு மேலும் வேலைப்பளு கொடுக்கவேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.