வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (08:46 IST)

அகமதாபாத் மைதானத்தை தொடர்ந்து கிண்டல் செய்யும் இங்கிலாந்து வீரர்!

அகமதாபாத் மைதானம் டெஸ்ட் போட்டிகள் நடத்த தகுதியானது இல்லை எனக் கூறி பல முன்னாள் வீரர்கள் கேலி செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டி இரண்டே நாட்களில் முடிந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மைதானத்தின் மீதும் பிசிசிஐ மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மைதானம் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து நான்காவது போட்டியும் அகமதாபாத் மைதானத்தில்தான் நடக்க உள்ளது. இதைக் கேலி செய்யும் விதமாக மைக்கேல் வான் விவசாயி ஏர் ஓட்டும் வயல் மற்றும் வயல் பகுதியில் நின்று பேட் செய்யும் ஒரு புகைப்படம் என இரு புகைப்படங்களை வெளியிட்டு மேலும் கிண்டல் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.