இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பிட்காயின்: அதிர்ச்சியில் மத்திய அரசு!!
உலகில் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணம் நேரடியாக பயன்படமால் இணையத்தில் மட்டுமே பயன்படுகிறது. இதற்கு கிரிப்டோ கரன்சி என்று பெயர். இதில் ஒன்றுதான் பிட்காயின்.
சமீப காலமாக பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு ரூ.12 லட்சமாகும். இதன் மதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிட்காயின்கள் அல்லது கிரிப்டோ கரென்சிகளை வாங்காதீர் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
ஆனால், வருமான வரித்துறையினர் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 6 லட்சம் வர்த்தகர்கள் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. Unocoin, Zebpay, Bitxoxo, Coinsecure இணையதளங்கள் இந்தியாவில் பிட்காயின்களை விற்கின்றன.
தென்கொரியாவில் அரசு பிட்காயின்களுக்கு தடை போட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பிட்காயினை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அறிவிக்காத நிலையில், பிட்காயின் புழக்கத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.