திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (05:27 IST)

11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அயர்லாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது

இந்த நிலையில் இந்திய அணி வரும் ஜூன் மாதம் அயர்லாந்து நாட்டிற்கும், ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செய்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூன் 27-ம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூன் 29-ம் தேதியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளும் முடிந்த பின்னர் அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு அயர்லாந்து சென்றது அதன் பின்னர் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது அயர்லாந்து செல்லவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.