திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (09:38 IST)

முதலிடத்தில் மும்பை, இரண்டாமிடத்தில் சிஎஸ்கே: போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்

MI vs CSK
முதலிடத்தில் மும்பை, இரண்டாமிடத்தில் சிஎஸ்கே: போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்
முதலிடத்தில் மும்பை, இரண்டாமிடத்தில் சிஎஸ்கே: போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியல்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தில் மும்பையும் அதற்கு முந்தைய இடமான ஒன்பதாவது இடத்தில் சென்னை அணியும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் போர்ப்ஸ் வெளியிட்ட மதிப்புமிக்க ஐபிஎல் அணிகள் குறித்த பட்டியலில் மும்பை அணி முதல் இடத்தையும் சிஎஸ்கே அணி 2-வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் அணிகளில் அதிக வருமானம் உள்ள அணிகளின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மும்பை மற்றும் சென்னை அணி முதல் இரண்டு இடங்களை பிடித்து உள்ளது என்பதும் கொல்கத்தா அணி 3-வது இடத்தை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள இரண்டு அணிகள் மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது