திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (10:00 IST)

ஐபிஎல் தொடரில் நான் அதிகம் சம்பளம் பெற்றது அவருக்கு பொறாமையை ஏற்படுத்தியது… சைமண்ட்ஸ் பகிர்ந்த ரகசியம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சைமண்ட்ஸ் ஐபிஎல் தொடர் குறித்து இப்போது பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரு சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றவர். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியவர்.

இந்நிலையில் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணம் உருவாக்கும் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் “ஐபிஎல் தொடரில் எனக்கும் ஹேடனுக்கும் அதிக தொகைக் கிடைத்தது. இது என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த மைக்கேல் கிளார்க்குக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. பணம் முக்கியமானது. ஆனால் சில நேரத்தில் அது உறவுகளுக்கு மத்தியில் விஷத்தை ஊற்றி விடுகிறது” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.