வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (19:28 IST)

ரெட் கார்ட் கொடுத்த நடுவரை புரட்டி எடுத்த வீரர்: கால்பந்து போட்டியில் பரபரப்பு

ஜெர்மனியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் வீரர் ஒருவருக்கு நடுவர் ரெக்கார்ட் கொடுத்ததால் அந்த வீரர் ஆத்திரமடைந்து நடுவரின் முகத்தில் கடுமையான தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜெர்மனியில் எப்.எஸ்.வி மியூன்ஸ்டர்  என்ற அணியில் விளையாடிய ஹெஸ்ஸி என்ற வீரர் விதிகளை மீறி விளையாடியதாகவும், சக வீரர்களை தாக்கியதாகவும் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்தார். மேலும் உடனே அவர் மைதானத்தில் இருந்து வெளியேற நடுவர் அறிவுறுத்தினார் 
 
ஆனால் நடுவரின் முடிவால் அதிருப்தி அடைந்த ஹெஸ்ஸி அவரிடம் வாக்குவாதம் செய்தார். மைதானத்தை விட்டு வெளியேற முடியாது என்றும் கூறி ஆத்திரமாக கூறினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் நடுவரின் முகத்தில் சரமாரியாக ஹெஸ்ஸி தாக்கினார்.
 
இதனை அடுத்து நிலைகுலைந்து விழுந்த நடுவரை மற்ற வீரர்கள் அரவணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய கால்பந்தாட்ட நிர்வாகிகள் ஹெஸ்ஸிக்கு மூன்று ஆண்டுகள் விளையாட தடை விதித்தனர். அது மட்டுமன்றி அவருடைய அணிக்கும் ஆறு மாதம் தடை விதித்து 553 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது