செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (22:42 IST)

ஐ.எஸ்.ஐ கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய கொல்கத்தா

கடந்த சில வாரங்களாக ஐ.எஸ்.ஐ. கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டத்திற்கு `ஜாம்ஷெட்பூர் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 51வது, 71வது மற்றும் 85வது நிமிடங்களில் அடுத்தடுத்து கொல்கத்தா கோல் போடு அசத்த, ஜாம்ஷெட்பூர் அணி கோல் போட திணறியது. கடைசியில் 90வது நிமிடத்தில் ஒரே ஒரு ஆறுதல் கோல் போட்டது ஜாம்ஷெட்பூர் அணி. இதனையடுத்து கொல்கத்தா அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டிக்கு பின்னர் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. கோவா, நார்த் ஈஸ்ட் யூனைடெட், ஜாம்ஷெட்பூர், ஒடிஷா ஆகிய அணிகள் அடுத்த நான்கு இடன்க்களில் உள்ளது. சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளத் என்பது குறிப்பிடத்தக்கது