1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (07:06 IST)

முதல்முறையாக தோனி கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜடேஜாவை கட்டிப்பிடித்து தூக்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி உலக கோப்பையை வென்றால் கூட எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இன்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்த மாட்டார். அதேபோல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்த மாட்டார். அந்த அளவுக்கு மெச்சூரிட்டியை கொண்டவர் நேற்று ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தது ரசிகர்கள் அனைவருக்கும் புதுமையாக இருந்தது 
 
நேற்றைய போட்டியில் கடைசி பந்தியில் பவுண்டரி அடித்து ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த நிலையில் முதல் முறையாக தோனி கண்களில் ஆனந்த கண்ணீரை பார்க்க முடிந்தது
 
அதுமட்டுமின்றி ஜடேஜாவை கட்டிப்பிடித்து தோளோடு தூக்கி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. முதல்முறையாக தோனி உணர்ச்சிவசப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva