ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (06:58 IST)

2 பந்துகளுக்கு முன் ஜடேஜாவின் மனநிலை என்ன? வெற்றிக்கு பின் அளித்த பேட்டி..!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதின என்பதும் இந்த போட்டியில் ஜடேஜாவின் அற்புதமான பேட்டிங்கால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் 15 ஓவர்களில் 171 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு சிஎஸ்கே அணிக்கு கொடுக்கப்பட்ட நிலையில் 14 ஓவர் முடிவில் 158 ரன்கள் அடித்திருந்தது.
 
6 பந்துகளில் 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் முதல் பந்தில் ரன் ஏதும் இல்லாமல் இருக்க அடுத்த மூன்று பந்துகளில் மூன்று சிங்கிள்கள் மட்டுமே கிடைத்தது. இதனை அடுத்து ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் சிக்ஸர் மற்றும் பௌண்டரியை அடித்த ஜடேஜா அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 
 
இந்த நிலையில் வெற்றிக்கு பின் அவர் அளித்த பேட்டியில் கடைசி இரண்டு பந்துக்கு முன் தான் அமைதியாக இருக்க வேண்டும் என தனக்குத்தானே கேட்டுக் கொண்டதாகவும், கண்டிப்பாக தன்னால் பத்து ரன்களை அடிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும் இதனை அடுத்து நான் என்னை நானே கட்டுப்படுத்தி கொண்டு அமைதிப்படுத்திக் கொண்டு அந்த இரண்டு பந்துகளை எதிர்கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva