1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. csk won the 2023 ipl cup

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள்.. ஜடேஜா அபார பேட்டிங்கால் சிஎஸ்கே வெற்றி..!

சென்னை
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.
 
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய நிலையில்  திடீரென மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. 
 
இதனை அடுத்து மழை நின்றவுடன் 171 ரன்கள் சென்னை அணி வெற்றி பெற இலக்காக அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் முதல் பந்தில் ஒரு சிக்சரும் இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரியும் ஜடேஜா அடித்து, சென்னை அணிக்கு வெற்றி கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
 
 இதனை அடுத்து சென்னை அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று உள்ளது 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2023: இறுதிப் போட்டி: சுதர்சன், கில் அதிரடி ஆட்டம்...சென்னை கிங்ஸ் அணிக்கு இலக்கு இதுதான்!