1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (13:28 IST)

பெங்களூரில் கனமழை: இந்தியா-நியூசிலாந்து முதல் நாள் டெஸ்ட் போட்டி ரத்தா?

பெங்களூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க இருந்த நிலையில், அங்கு கன மழை பெய்து வருவதால் இன்னும் டாஸ் கூட போடவில்லை என்றும், இன்றைய போட்டி அனேகமாக ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக இன்னும் டாஸ் போடப்படவில்லை என்றும், போட்டி தொடங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதியம் ஒரு மணிக்கு மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள், மைதானத்தில் இன்னும் மழை நீர் தேங்கி இருப்பதாகவும், மழை பெய்து கொண்டிருப்பதாகவும், இப்போதைக்கு ஆட்டம் தொடர வாய்ப்பு இல்லை என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

எனவே இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   இன்றைய போட்டியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், இன்னும் போட்டி தொடங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva