வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (09:31 IST)

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அரிய வால் நட்சத்திரம்? இந்தியாவில் எங்கெல்லாம் தெரியும்?

Comet

80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடந்து செல்லும் வால் நட்சத்திரம் தற்போது தென்பட தொடங்கியுள்ளது.

 

 

விண்வெளியில் பல கிரகங்களை தாண்டி பயணிக்கும் வால்மீன்கள் சூரிய குடும்பத்திற்குள் புகுந்து செல்வது உண்டு. அவ்வாறாக செல்லும் வால்மீன்களில் சிலவற்றை அதிர்ஷ்டம் இருந்தால் நாம் வெறும் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறான ஒரு அரிய வால்மீன் தற்போது பூமியை கடந்து சென்று கொண்டிருப்பதை வானியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

2023ம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த வால்மீனை சி/2023 என வானியல் விஞ்ஞானிகள் பெயரிட்டனர். 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வந்து திரும்ப செல்லும் இந்த வால்மீன் தற்போது சூரியனை சுற்றி பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.
 

 

சூரியன் மறையும் நேரத்தில் மேற்கு திசையில் இந்த வால்மீனை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிறிய அளவிலான தொலைநோக்கிகள் கொண்டு பார்த்தால் அதன் நீண்ட வால் பகுதியையும் காண முடியும் என்கின்றனர் வானியல் ஆர்வலர்கள். வரும் அக்டோபர் 24 வரை காணக்கூடிய இந்த வால் நட்சத்திரம் இந்தியாவின் தமிழ்நாடு, லடாக், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக காட்சியளித்த நிலையில் பலர் அதை படம் பிடித்து பகிர்ந்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K