பெண்களுக்கான உலக கோப்பை கால் பந்து போட்டி இன்று தொடங்குகிறது

Last Updated: வெள்ளி, 7 ஜூன் 2019 (15:25 IST)
பெண்களுக்கான எட்டாவது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்குகிறது.
 
1991 ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது.இந்த வருடம் நடக்கவிருக்கின்ற எட்டாவது உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமெ பங்கேற்கின்றன.   இந்த உலக கோப்பையின் லீக் போட்டிகள் ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து ஜுன் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

மேலும் நாக் அவுட் சுற்றான தகுதி-16 சுற்று ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரையிலும், கால் இறுதி போட்டிகள் ஜூன் 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரையிறுதி போட்டிகள் ஜூலை 2, 3 தேதிகளிலும்,இறுதிபோட்டி ஜூலை 7 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளன. இன்று ஃபிரான்ஸ்-கொரியா அணிகள் மோதுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :