திங்கள், 28 ஏப்ரல் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2025 (09:54 IST)

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் வடிவமாக டி 20 கிரிக்கெட் உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் லீக் போட்டிகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். இதில் மிகப்பிரபலமாக இருப்பதும் அதிகம் பேரால் விரும்பிப் பார்க்கப்படுவதுமான தொடராக பிசிசிஐ நடத்தும் ‘ஐபிஎல்’ தொடர் உள்ளது.

இதில் 2 மாதங்கள் விளையாடும் ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளுக்காக ஒரு ஆண்டு விளையாடினால் சம்பாதிக்கும் வருவாயை விட பல மடங்கு சம்பாதிக்க முடிகிறது. இதன் காரணமாக உலகில் உள்ள பல கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் காரணமாக இந்த தொடருக்கு ஸ்பான்சர்கள் குவிகின்றனர்.

ஆனால் மற்ற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்கள் இந்த அளவு பொருளாதார பின்புலத்துடன் நடப்பதில்லை. அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் PSL தொடரில் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்சுக்கு ‘hair dryer’ பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இதை அவர் சமூகவலைதளத்தில் பகிர அது கேலிபொருளாக மாறியுள்ளது.