திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 டிசம்பர் 2020 (19:08 IST)

யார்க்கர் புகழ் நடராஜனுக்கு முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த நடராஜன் இன்று முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியில் கலந்துகொண்டார்
 
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் விளையாடிய இந்த போட்டிகளில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
ஏற்கனவே சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்
 
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், ‘இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் 
நடராஜன்  அவர்களுக்கு வாழ்த்துகள்! என்று பதிவு செய்துள்ளார்