வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (14:02 IST)

ஸ்டம்ப்பை தெறிக்க விட்ட நடராஜன்! - சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் போட்டியில் நடராஜன் விக்கெட் வீழ்த்தியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்றைய இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. 303 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களம் இறங்கியுள்ள நிலையில் வார்னர் இல்லாததால் ஓபனிங் பேட்ஸ்மேனாக லாம்பாக்னே களம் இறங்கியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் விளையாடுவதால் அவரது ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது மூன்றாவது ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் பந்து வீசிய நடராஜன் தனது சாமர்த்தியமான பந்து வீச்சால் லம்பாக்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் வீசிய வேகப்பந்தை லம்பாக்னே தடுக்க முடியாத நிலையில் ஸ்டம்ப்பில் பட்டு போல்ட் ஆனது. சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜனின் முதல் விக்கெட் இது என்பதால் சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.