வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (08:37 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 107 ரன்களில் சுருண்டது இந்தியா

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேப்டன் விராத் கோஹ்லி 23 ரன்களும், அஸ்வின் 29 ரன்களும் எடுத்தனர்.
 
இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மிக அபாரமாக பந்துவீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்களையும், பிராட் மற்றும் கர்ரண் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது.
 
இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.