1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (14:11 IST)

ரஷ்யாவுக்கு புதிய பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ரஷ்ய உளவு படையை சேர்ந்த ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

 
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா மீது ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
 
ரஷ்ய உளவு படையைச் சேர்ந்த செர்கே ஸ்கிரிபால் என்பவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா தான் இவர் மீது ரசாயன தாக்குதல நடத்தியதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியது. 
 
அமெரிக்காவும் கண்டனம் தேரிவித்தது. ஆனால் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
 
இதையடுத்து அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா செய்தி தொடர்பாளர் கெதர் நவ்ர்த கூறியதாவது:-
 
ரசாயன மற்றும் உயிரின ஆயுதங்களை பயன்படுத்த சர்வேதச தடை உள்ளது. ஆனால் அதையும் மீறி ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதை நாங்களும் உறுதி செய்து இருக்கிறோம். இதனால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.