திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (15:45 IST)

இரண்டாவது டெஸ்ட் போட்டி: மழையால் டாஸ் தாமதம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க மழை குறுக்கிட்டதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
 
தற்போது மழை குறுக்கிட்டதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.