93 பந்தில் 128 ரன்கள்: ஐபிஎல் அனுபவத்தில் வெளுத்து வாங்கிய பெயர்ஸ்டோ

Last Modified புதன், 15 மே 2019 (07:51 IST)
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டியால் ஃபார்மில் இல்லாத பல வீர்ர்கள் நல்ல ஃபார்முக்கு வந்துவிட்டனர். அவர்களில் ஒருவர் சன் ரைசஸ் ஐதராபாத் அணியில் இருந்த ஜான்னி பெயர்ஸ்டோவை கூறலாம். நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் பெயர்ஸ்டோ அடித்த 128 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தது
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ரன்கள் குவித்தது. இமாம் உல் ஹக் 151 ரன்கள் எடுத்தார்.

359 என்ற இமாலய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தால் இலக்கை 44.5 ஓவர்களில் அடைந்தது. பெயர்ஸ்டோ 128 ரன்களும், ஜேஜே ராய்76 ரன்களும், எம்.எம்.அலி 46 ரன்களும், ரூட் 43 ரன்களும் எடுத்தனர். பெயர்ஸ்டோ ஆட்டநாயகனக தேர்வு செய்யப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :