1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (10:28 IST)

கதறிய 10 வயது மணப்பெண்: ப்ரோக்கருக்கு வலைவீச்சு!

பாகிஸ்தானில் 10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தான் ஷிகார்பூர் நகரில் வசித்து வருபவர் முகமது சோமர். 40 வயதான இவருக்கும் 10 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி மணமேடையில் அழுத்துக்கொண்டே இருந்துள்ளார். 
 
இதனால், திருமணத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்த ந்பார் ஒருவர் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளார். போலீஸார் அங்கு வருவதர்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும், அந்த சிறுமியை அவர்கள் மீட்டதோடு, முகமது சோமரை கைது செய்துதனர். 
 
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த சிறுமியின் த்ந்தைக்கு ரூ.2,50,000 பணம் கொடுத்துமயக்கி திருமணம் செய்ய இருந்ததும், பணத்தின் மீதுள்ள ஆசையால் சிறுமிக்கு 17 வயதாகிறது என அவர் தந்தை கூறியதும் தெரியவந்துள்ளது. 
 
இதில் இவர்கள் இருவரையும் இந்த நிலைக்கு பேசி கொண்டுவந்த திருமண ப்ரோக்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.