வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (20:44 IST)

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்

பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் கயீதா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது.
ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் கயீதா கருதப்பட்டது. ஆயிரகணக்கான பேர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிராக சண்டையிட்டனர்.
 
இந்த அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது.
 
ஆனால், அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா கொல்லப்பட்ட பின் அந்த அமைப்பு வலுவிழந்தது. இதற்கிடையே ஐ.எஸ் அமைப்பும் எழுச்சி பெற்றது.
 
சரி. இப்போது இந்த அமைப்பின் நிலை என்ன? சர்வதேச பாதுகாப்புக்கு இன்னும் இந்த அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கிறதா?
 
அமைதியான எழுச்சி
கடந்த சில தினங்களாக ஐ.எஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், அமைதியாக அல் - கயீதா அமைப்பு மெல்ல வலுபெற்றுவருகிறது. குறிப்பாக பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
 
அமெரிக்க உளவு அமைப்பின் சமீபத்திய அறிக்கையும் இது குறித்து எச்சரித்துள்ளது.
 
அந்த அறிக்கை: மூத்த அல் கொய்தா தலைவர்கள் தங்களது சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மேற்குலகம் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு உதவி வருகின்றனர்.
 
ஐ.நா மன்றமும் இவ்வாறே கூறி உள்ளது.
 
சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அந்த அமைப்பின் அறிக்கை, "அந்த அமைப்பு உயிர் பெற்று வருகிறது. உலகின் பல இடங்களில் அந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது" என்று குறிப்பிடுகிறது.
 
பிரிட்டன் உளவுத்துறையின் தலைவர் அலெக்ஸ் யங்கும் அல் கயீதாவில் எழுச்சி குறித்து எச்சரித்துள்ளார்.
 
 
அல் கயீதாவில் வலைபின்னல்
வான் தாக்குதலால் ஐ.எஸ் அமைப்பு தலைவர்கள் கொல்லப்பட்டப்பிம் அல் - கயீதா தன் யுத்திகளை மாற்றி உள்ளது.
 
 
இதனுடன் இணைந்து இயங்கிய அமைப்புகளுடன் ஒரு வலைப்பின்னலை இந்த அமைப்பு மேம்படுத்தி உள்ளது. ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
 
ஐ.எஸ் அமைப்பு இவ்வாறாக செயல்படாது.
 
அதுமட்டுமல்லாமல், உள்ளூர் மக்களை ஈர்க்க சமூக மேம்பாட்டு திட்டங்களிலும் அல் கயீதா செயல்படுத்தி வருகிறது.
 
2013ம் ஆண்டு இந்த மைப்பு ஜிஹாதிகளுக்கான நெறிமுறைகளை வழிவகுத்தது. இதில் பல சீர்த்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தன.
 
"உள்ளூர் பிரச்சனைகளையும் இந்த அமைப்பு உள்வாங்க தொடங்கி இருக்கிறது. ஊழலுக்கு எதிராக போராடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் இந்த அமைப்பு இணைத்து கொண்டுள்ளது" என்கிறார் பேராசிரியர் எலிசபெத் கெண்டல்.
 
அவர், "உள்ளூர் மக்களுக்கான பாதுகாவலன் என்ற தோற்றத்தை இந்த அமைப்பு ஏற்படுத்தி கொண்டது" என்கிறார்.
 
அல் கொய்தா தமது பல கிளை அமைப்புகள் மூலம் தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது.
 
 
ஆர்ம்டு கான்ஃப்லிக்ட் லொகேசன் மற்றும் ஈவெண்ட் டேடா ப்ராஜெக்ட் டமைப்பின் தரவுகள் இந்த அமைப்பானது 2018ஆம் ஆண்டு 316 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.
 
 
அல் கொய்தாவின் துணை அமைப்புகள்: அல் கயீதா இன் தி இஸ்லாமிக் மாக்ரெப் 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது, அல் கயீதா இன் தி அரேபியன் பெனின்சுலா 2009ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, அல் கயீதா இன் தி இந்தியன் சப் கான்டினெண்ட் 2014ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஆஃப்கன், பாகிஸ்தான், இந்தியா, மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இயங்குகிறது.
 
மாலி மற்றும் மேற்கு ஆஃப்ரிக்காவில் பல அயுத குழுக்கள் ஜமா அட் நஸ்ரட் அல் இஸ்லாம் வல் முஸ்லிமின் எனற பேரில் இணைக்கப்பட்டுள்ளது. இது அல் கொய்தாவின் துணை அமைப்பாகும். இந்த அமைப்பில் 800 பேர் இருக்கிறார்கள்.
 
சோமாலியா மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் அல் சபாப் என்ற அமைப்பு அல் கயீதாவிடம் விசுவாசம் உள்ள அமைப்பாகும். இந்த அமைப்பில் 6 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
 
சிரியாவில் அல் கயீதா இயங்குகிறது. சிரியாவில் உள்ள பல ஆயுத குழுக்கள் இணைக்கப்பட்டு ஹயாத் தஹ்ரீ அல் சாம் என்ற அமைப்பாக உருவானது. இவர்களுக்கு அல் கொய்தாவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இந்த அமைப்பு சிரியாவின் இட்லீப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பில் 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
 
எதிர்கால தலைமை?
2015ஆம் ஆண்டு அல் கயீதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல் ஜவஹரி குகையிலிருந்து புறப்படும் சிங்கமென ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார்.
 
 
அவர் ஒசாமாவின் மகன் ஹம்சா பின் லேடன். இவர்தான் எதிர்காலத்தில் அல் கொய்தாவை வழிநடத்துவார் என பார்க்கப்படுகிறது.
 
ஹம்சாவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்கா, அவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசுதொகையை அறிவித்துள்ளது.