தொடர்புடைய செய்திகள்
- ‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!
- என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!
- ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!
- CSK vs SRH மேட்ச் டிக்கெட்.. சீண்டாத சிஎஸ்கே ரசிகர்கள்! - அதிர்ச்சியில் சிஎஸ்கே நிர்வாகம்!
- ஏலத்தில் கோட்டை விட்டுவிட்டது சி எஸ் கே அணி… விமர்சித்த சுரேஷ் ரெய்னா!
அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.
இதையடுத்து அவரின் தந்தை யோக்ராஜ் சிங் என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிந்ததற்குக் காரணமே தோனி மற்றும் கோலிதான்” என்றெல்லாம் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் யுவ்ராஜ் சிங் அதை மறுத்துள்ளார். தற்போது இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார் யுவ்ராஜ்.
அவரிடம் பயிற்சி பெற்ற வீரர்களில் இந்திய அணியில் இடம்பிடித்துக் கலக்கி வரும் இருவர் அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும். அவர்கள் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள யுவ்ராஜ் நான் ஆடும் போது என் அம்மா பதற்றமாகிவிடுவார். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது அபிஷேக் ஷர்மாவும் ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிறேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்