செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (18:01 IST)

பாகிஸ்தானில் சூஃபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் புகழ்பெற்ற சூஃபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறந்தோரில் 5 பேர் காவல்துறை அதிகாரிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையின் வேன் ஒன்று இந்த தாக்குதலின் இலக்கு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
 
தெற்காசியவில் உள்ள மிகப் பழமையான தாடா தாபார் சூஃபி புனிதத்தலத்துக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 8.44 மணிக்கு இந்த  குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் குழுவிலிருந்து பிரிந்த ஹிஸ்புல் அஹ்ரார் குழு தெரிவித்துள்ளது. ரமலான் நோன்பு தொடங்கியுள்ள சமயத்தில் பாகிஸ்தானில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் சுன்னி, ஷியா பிரிவை  சேர்ந்த பலர் இங்கு வருகை தருவர்.
 
சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மிகவும் மோசமாக சேதமடைந்த காவல்துறையின் வாகனம் புனிதத்தலத்தின்  காவல்சாவடிக்கு அருகில் சிதறிக் கிடப்பதை காட்டுகின்றது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டித்துள்ளார்.
இந்த புனித்ததலத்தில் 2010ஆம் நடைபெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர். லாகூரிலுள்ள புனிததலங்களில் மிகவும் புனிதமான ஒன்றாக இது கருதப்படுகிறது.