திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:47 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டிஎல்எஸ் முறையில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி தொடங்கும் முன் மழை பெய்ததால் 10 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 10 ஓவர்களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நமீபியா விளையாடிய நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் அபாரமாக விளையாடிய 47 ரன்கள் எடுத்ததை எடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து பி பிரிவில் இங்கிலாந்து அணி 5 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும், ஸ்காட்லா தனி 5 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்து அணி இன்று ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வரும் நிலையில் அந்த அணி ஒருவேளை வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva