1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (08:59 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: 3.1 ஓவர்களில் முடிந்தது போட்டி.. ஓமனை வீழ்த்திய இங்கிலாந்து..!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியை இங்கிலாந்து அணி 3.1  ஓவரில் முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி வெறும் 47 ரன்களில் ஆட்டம் இழந்தது. அந்த அணியின் ஒரே ஒரு பேட்ஸ்மேன் மட்டும் தான் இரட்டை இலக்கங்களில் ரன் எடுத்தார் என்பதும் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட்டில் தான் குறிப்பாக இரண்டு பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 48 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில் 3.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து பி பிரிவில் இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பெரும் மூன்று ஓவர்களில் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva