வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (08:37 IST)

கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் இன்று நேபாளம் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது,
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நேபாளம் அணி விளையாடிய நிலையில் அடுத்தடுத்து கேட்டுகள் விழுந்ததால் ரன்கள் எடுக்க திணறியது.
 
இந்த நிலையில் கடைசி ஓவர்கள் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் நேபாளம் இருந்தது. ஆனால் கடைசி பந்தில் விக்கெட் விழுந்ததை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
இதனை அடுத்து புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் நேபாளம் ஒரே புள்ளியுடன் தொடரில் இருந்து வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Mahendran