புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (12:06 IST)

இந்தியாவில் மட்டும் பெட்ரோல் உயர்வு ஏன்?? தயாநிதி மாறன் கேள்வி

அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் உயர்வு ஏன்?? புதுச்சேரியிலும் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது திமுக எம்.பி.தயாநிதி மாறன் பேட்டி. 

 
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் , மு.க தமிழரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் அப்போது பேட்டியளித்த தயாநிதி மாறன், 
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற பொருள்களின் விலையும் உயர்வை சந்தித்து வருகிறது கச்சா எண்ணெய் குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை மட்டும் குறைக்காதது  ஏன் அண்டை நாடுகளில்  பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் ஏன் விலை உயர்கிறது என்பதுதான் இப்போது கேள்வி மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும்.
 
தமிழில் பேசும் பிரதமர் தமிழுக்கும் தமிழகத்திற்கும் என்ன செய்தார்? வட மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்ததை போல புதுவையிலும் முயற்சி செய்கின்றனர். புதுவையில் இத்தனை நாட்களாக ஆளுநர் மாற்றம் கோரி வந்தனர். ஆனால் தற்போது ஆளுநரை மாற்றியது எதற்கு? எனவும் கேள்வி எழுப்பினார்.