வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (08:49 IST)

எந்த இடத்திலும் இறங்கத் தயார் – தொடர்நாயகன் தோனி கருத்து…

அணிக்குத் தேவைப்படும் நிலையில் தான் இறங்கத்தயாராக இருப்பதாக தொடர்நாயகன் விருது பெற்ற தோனிக் கூறியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு மிக நீண்ட சுற்றுப்பயணமாக மூன்று மாதங்கள் சென்று அங்கு டெஸ்ட், மற்றும் ஒருநாள் போடிகளில் வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே  கேப்டன் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.

இந்தத் தொடரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுத்து மூன்றுப் போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தி தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். கிட்டதட்ட 1 ஆண்டுக்குப் பிறகு தோனி இந்த தொடரில்தான் முதன் முதலாக அரைசதம் அடித்துள்ளார். உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் தோனி ஃபார்ம்முக்கு வந்திருப்பது அணிக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

தோனி :-
மேன் ஆஃப் த சீரிஸ் விருது பெற்ற பின்னர் ‘மெல்போர்ன் ஆடுகளம் மிகவும் மந்தமான பிட்ச். நாம் விரும்பும்போதெல்லாம் அடிக்க முடியாது. ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று வெல்ல வேண்டும்,  எனவே இது மாதிரியான ஆடுகளத்தில் எந்த பவுலரை நாம் அடிக்க வேண்டுமென்பதை தீர்மானித்து ஆட வேண்டும். சிறப்பாக பந்து வீசுபவர்களை அடிக்கப் போய் ஆட்டமிழப்பதில் ஒரு பயனும் இல்லை.

நான் 4ஆவது இடத்தில் இறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எந்த நிலையிலும் இறங்கத் தயார். மீண்டும் 5 அல்லது 6ம் நிலையில் இறங்கச் சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சியே.  14 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடிவிட்டு நான் 6ம் நிலையில் இறங்க மாட்டேன் என்றோ 4 அல்லது 5-ல் தான் இறங்குவேன் என்றோ கூற முடியாது. அணிக்குத் தேவைப்படும் இடத்தில் இறங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ எனக் கூறினார்.